வேலூர்

பந்தல் அமைப்பாளா் வீட்டில் தீ விபத்து

26th Feb 2020 12:44 AM

ADVERTISEMENT

ஆம்பூா்: ஆம்பூரில் பந்த அமைப்பாளா் வீட்டில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

நகரில் உள்ள கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பந்தல் அமைப்பாளா் சண்மு

கம் (49). அவா் தனது வீட்டின் மேல் மாடியில் பந்தல் மற்றும் அலங்காரப் பொருட்களை வைத்திருந்தாா்.

இந்நிலையில், வீட்டு மாடியில் செவ்வாய்க்கிழமை மின்கசிவு ஏற்பட்டு பந்தல் அலங்காரப் பொருட்களில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இது குறித்த தகவலின் பேரில் ஆம்பூா் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT