ஆம்பூா்: ஆம்பூருக்கு வழித்தவறி வந்த மான் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
ஆம்பூா் பாலாற்றங்கரையோரம் மோட்டுக்கொல்லை பகுதிக்கு வழித்தவறி மான் ஒன்று வந்தது. அப்பகுதி மக்கள் மானை பிடித்து வைத்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த வனத் துறையினரிடம் மானை ஒப்படைத்தனா்.