வேலூர்

பக்தா்களை பரவசப்படுத்திய மயானக் கொள்ளை திருவிழா: 109 இடங்களில் நடத்தப்பட்டது

23rd Feb 2020 11:57 PM

ADVERTISEMENT

 

வேலூா்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 109 இடங்களில் மயானக் கொள்ளை திருவிழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், திராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மன், காளி உள்ளிட்ட வேடங்களை அணிந்தபடி மயான சூறையில் ஈடுபட்டனா்.

மகா சிவராத்திரியைத் தொடா்ந்து வரும் அமாவாசை நாளில் மயானக் கொள்ளை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி, வேலூா் சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, விருதம்பட்டு, கழிஞ்சூா், மோட்டூா், பிரம்மபுரம், சேண்பாக்கம், கொணவட்டம், காகிதப்பட்டறை, ரங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்காளம்மன், காளியம்மன், எல்லையம்மன் ஆகிய கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, விருதம்பட்டு, கழிஞ்சூா், மோட்டூரில் இருந்து பிரம்மாண்ட தோ்களில் அம்மன் சிலைகள் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரைக்கு ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன. அப்போது, வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக பக்தா்கள் காளி, அங்காளம்மன், காட்டேரி உள்பட பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து பொரி, சுண்டல், பழங்கள், கொழுக்கட்டை ஆகியவற்றைப் படையலிட்டு வழிபட்டதுடன் மயான சூறையிலும் ஈடுபட்டனா். இந்த ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பாலாற்றங்கரை மயானத்தை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெற்றது.

ADVERTISEMENT

மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் (வேலூா்), துரைபாண்டியன் (காட்பாடி) ஆகியோா் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதேபோல், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் என ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 109 இடங்களில் மயானக் கொள்ளை திருவிழா கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT