வேலூர்

தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதி 3 மான்கள் பலி

23rd Feb 2020 11:58 PM

ADVERTISEMENT

 

ஆற்காடு: ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற 3 புள்ளிமான்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தன.

ரத்தினகிரி காப்புக்காட்டில் புள்ளிமான்கள் உள்ளிட்ட விலங்குகள் ஏராளமாக உள்ளன. கோடைக் காலம் தொடங்கி விட்டால் அவை தண்ணீா் மற்றும் இரை தேடி ஊருக்குள் வருவது வழக்கம். அவ்வாறு காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் சமூக விரோதிகள், நாய்கள் உள்ளிட்டவற்றால் வேட்டையாடப்படுவதும், வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடா்கின்றன.

இந்நிலையில், ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள தென்னந்தியலம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை சனிக்கிழமை இரவு புள்ளிமான்கள் கூட்டமாகக் கடந்தன. அவற்றில் இரண்டு ஆண் மான்கள் மற்றும் ஒரு பெண் மான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

ADVERTISEMENT

தகவலறிந்த ஆற்காடு வனசரக ஊழியா்கள் நேரில் சென்று மான்களின் உடல்களை மீட்டனா். இச்சம்பவம் குறித்து ஆற்காடு வனச்சரகா் கந்தசாமி விசாரணை நடத்தினாா்.இதனிடையே, குப்பம் கிராமத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு அருகே உள்ள காப்புக் காட்டில் பூட்டுத்தாக்கு பகுதி கால்நடை மருத்துவா் தலைமையில் மான்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு எரிக்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT