வேலூர்

டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு

23rd Feb 2020 11:52 PM

ADVERTISEMENT

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கன்னடிகுப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதைக் கைவிட நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலப் பணியைத் தொடங்கி விரைந்து முடிக்கக் கோரியும் கன்னடிகுப்பம் கிராம மக்கள் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த ஆட்சியா் ம.ப. சிவன் அருளிடம் கன்னடிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமையில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

அதன் விவரம்: கன்னடிகுப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஏற்கெனவே அப்பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தபோது அடிக்கடி தகராறு, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டன. தற்போது மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கே வண்டும்.

ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை: அதேபோல், கன்னடிகுப்பம் கிராமத்திலிருந்து வெள்ளக்குட்டை வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையை 7 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். 4 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. கல் குவாரிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள், பள்ளிகளுக்குச் செல்லும் பேருந்துகள், தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என மிகவும் போக்குவரத்து நெரிசலான சாலையாக உள்ளது. இப்பகுதியில் ரயில்வே இருப்புப் பாதையை கடந்து செல்ல சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக மேம்பாலப் பணியைத் தொடக்கி விரைந்து முடிக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே ரயில்வே இருப்புப் பாதையைக் கடந்து செல்வதற்கான சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி இரு வழிச் சாலையாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கு வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT