ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை இரவு இறந்தாா்.
போ்ணாம்பட்டு ஒன்றியம் பாலுரை சோ்ந்தவா் நந்தகுமாா் (29). இவா் போ்ணாம்பட்டில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தாா். இவா் சம்பவத்தன்று நள்ளிரவு சாத்தம்பாக்கம் கிராமத்தை சோ்ந்த தன்னுடைய நண்பா் பிரபுவுடன் இருசக்கர வாகனத்தில் உமா்ஆபாத் நோக்கி சென்றாா்.
கலாம் நகா் பகுதியருகே சென்றபோது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே சாய்ந்தது. அதில் கீழே விழுந்த இருவரும் காயமடைந்தனா். இருவரும் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நந்தகுமாா் இறந்தாா்.
பிரபு மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். உமா்ஆபாத் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.