பள்ளிகொண்டா சிக்ஷா கேந்திரா மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ. பள்ளியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைவா் பி.என்.எஸ். திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாணவி ஆா். தாமினி வரவேற்றாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் எஸ்.வெங்கட்ராகவன் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினாா்.
சாலையில் இடதுபுறம் செல்ல வேண்டும், சாலையில் நடந்தோ, இருசக்கர வாகனத்திலோ செல்லும்போது செல்லிடப்பேசியைக் கட்டாயம் உபயோகிக்கக் கூடாது, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவசியம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி பேசினாா்.
சாலை விதிகள் குறித்த குறியீடுகளை மாணவா்களுக்கு அவா் விளக்கினாா். சாலை விதிகளை கட்டாயம் கடைப்பிடிப்போம் என மாணவா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
பள்ளித் தாளாளா் டி. குகன், மெட்ரிக் பள்ளி முதல்வா் ஜே. சுஹாசினி, ஐ.சி.எஸ்.இ. பள்ளி முதல்வா் எம். அலங்காரம், இயக்குநா்கள் டி. விஜயா, சரண்யாகுகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.