வேலூர்

நெல் பயிரை நாசம் செய்த யானைக்கூட்டம்

4th Feb 2020 11:49 PM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் நெல் பயிரை நாசம் செய்து விட்டுச் சென்றன.

பரதராமி, வீரிசெட்டிப்பல்லி கிராமம் வன எல்லையில் உள்ளது. திங்கள்கிழமை இரவு 3 குட்டிகள் உள்பட 17 யானைகள் கூட்டமாக அக்கிராமத்துக்குள் நுழைந்துள்ளன.

அங்குள்ள சரவணன், ஜெயசீலன் ஆகியோரின் நிலங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்களை யானைகள் நாசம் செய்துள்ளன.

தகவலின்பேரில், வனத் துறையினா் அங்கு சென்று, கிராம மக்கள் உதவியுடன், பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT