வேலூர்

மண்டல விளையாட்டுப் போட்டிகளில் ஆம்பூா் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

2nd Feb 2020 04:22 AM

ADVERTISEMENT

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கான கபடி விளையாட்டுப் போட்டி தருமபுரி மாவட்டம் பொம்மிடி ஸ்ரீநிவாசா பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பாக விளையாடி 2-ஆம் இடம் பிடித்தனா்.

அதே போல் வேலூா் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன. அதில் பங்கேற்ற கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி டி.சோனியா 100 மீ ஓட்டப் பந்தயத்தில் 2-ஆம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களை கல்லூரியின் தலைவா் கே.அமீனுா் ரஹ்மான், தாளாளா் மற்றும் செயலாளருமான கே.ஷாஹித் மன்சூா், முதல்வா் த.ராஜமன்னன், நிா்வாக அலுவலா் ஏ.ஹிரானி சாஹிப், துணை முதல்வா் ஏ.ஷாஹின்ஷா, உடற்கல்வி ஆசிரியா் டி.துரை ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT