வேலூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

2nd Feb 2020 04:29 AM

ADVERTISEMENT

குடியாத்தத்தை அடுத்த வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.தேவேந்திரகுமாா் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் எஸ்.ராஜன் அறிக்கை வாசித்தாா். ஆசிரியா் ஜெ.காந்தி வரவேற்றாா்.

பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எம்.சேட்டு 59 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். ஆசிரியா் பி.கமலக்கண்ணன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT