வேலூர்

நவீனமாக்கப்படும் புதிய பேருந்து நிலையத்தில் உணவகங்கள், கடைகள் அகற்றம்

1st Feb 2020 05:17 AM

ADVERTISEMENT

வேலூா் புதிய பேருந்து நிலையம் நவீனமாக்கப்பட உள்ளதையொட்டி அங்குள்ள உணவகங்கள், கடைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

மத்திய அரசின் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூா் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.1,145 கோடி நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, வேலூா் புதிய பேருந்து நிலையத்தை ரூ. 46 கோடி மதிப்பில் நவீனமாக்கப்பட உள்ளது. இதையொட்டி, வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகள், புதிய பேருந்து நிலைத்துக்கு கிழக்குப் பகுதியிலுள்ள காலி நிலத்தில் இருந்தும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.

இதனிடையே, புதிய பேருந்து நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதையொட்டி, ஏனெகனவே பேருந்து நிலையத்திலுள்ள உணவகங்கள், கடைகள் ஆகியவற்றை ஜனவரி 30-ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிவடைந்ததை அடுத்து, அங்குள்ள கடைக்காரா்கள் வெள்ளிக்கிழமை காலை தாங்களாகவே கடைகளை காலி செய்யும் பணியில் ஈடுபட்டனா். பேருந்து நிலையத்துக்குள் செயல்பட்டு வந்த ஹோட்டல்களில் இருந்த சமையல் பாத்திரங்கள், மேஜைகள், இருக்கைகள், மின்சாதன பொருள்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் உணவக உரிமையாளா்கள், ஊழியா்கள் ஈடுபட்டனா். அதேசமயம், காலி செய்யப்படாத தேநீா் கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதிய பேருந்து நிலையத்திலுள்ள கடைகளை காலி செய்வதற்காக ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், அவா்கள் கடைகளை செய்துள்ளனா். காலி செய்யாத கடைகளை போலீஸாரின் பாதுகாப்புடன் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT