வேலூர்

வேலூரில் மத்திய குழு ஆய்வு

DIN

நிவர் புயலால் வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய ஆய்வுக்குழு திங்கள்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.

நிவர் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 25, 26ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் பாலாற்றின் துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், மாவட்டம் முழுவதும் பலத்த சேதங்களும் ஏற்பட்டன. இதன்படி, மாவட்டம் முழுவதும் 242 வீடுகளும், 918.75 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர் வகைகளும், 6 பசுக்கள், 2 மாடுகள், 5 ஆடுகள், கோழி, வாத்துக்கள் உள்பட 6,342 பறவைகள் வெள்ள பாதிப்பில் உயிரிழந்தன. இவற்றுக்கு மொத்தம் ரூ.1.44 கோடி நிவாரணம் கணக்கிடப்பட்டுள்ளது.

இதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம் ஆகியவற்றுக்கு சொந்தமான சாலைகள், பாலங்கள், கட்டடங்கள், மின்கம்பங்கள் போன்றவற்றின் சேத மதிப்புகள் கணக்கிடப்பட்டன. இதில், மாவட்டம் முழுவதும் ரூ.25 கோடியே 26 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சேத விவகாரங்களை மத்திய நீர்வள இயக்குநர் ஹர்ஷா தலைமையிலான மத்திய ஆய்வுக்குழுவினர் வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வுக்குழுவில் மத்திய மின்சக்தி துறை துணை இயக்குநர் ஓ.பி.சுமன், மத்திய அரசின் செலவினங்கள் துறை துணை இயக்குநர் அமித்குமார், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் தரம்வீர்ஜா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலரும், குழு ஒருங்கிணைப்பாளருமான க.மணிவாசன், தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குநர் கண்ணன் ஆகியோரும் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு நிவர் புயலால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வேலூரில் உள்ள தனியார் விடுதியில் ஒலி, ஒளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் விளக்கம் அளித்தார். 

பின்னர், பாதி க்கப்பட்ட பகுதிகளான கண்டிப்பேடு கிராமம், இளையநல்லூர், பொன்னை அணைக்கட்டில் பழுதடைந்த மதகுகள், மாதண்டகுப்பத்தில் சேதமடைந்த சாலைகள், மின்கம்பங்கள் ஆகியவற்றை மத்திய ஆய்வுக்குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வக்குமார், பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT