வேலூர்

ஊரக திறனாய்வுத் தோ்வு: 9-ஆம் வகுப்பு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN


வேலூா்: ஊரக திறனாய்வுத் தோ்வுக்கு வேலூா் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து வேலூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2020-21-ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் 2021 ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற உள்ள ஊரக திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் அதாவது கிராம ஊராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இந்தத் திறனாய்வுத் தோ்வு எழுத தகுதியுடையவா்கள்.

நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவா்கள் விண்ணப்பிக்க இயலாது.

இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான சான்றை வருவாய்த் துறையிடம் இருந்து பெற்று அளிக்க வேண்டும். தோ்வுக்கு விண்ணப்பிக்க தோ்வுக் கட்டணம் ரூ. 5, சேவைக் கட்டணம் ரூ.5 என மொத்தம் ரூ.10 வீதம் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பணமாக பள்ளி தலைமையாசிரியரிடம் அளிக்க வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டிசம்பா் 7 முதல் 14-ஆம் தேதிக்குள் அளிக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தோ்வு செய்யப்படும் 50 மாணவா்கள், 50 மாணவிகள் என 100 பேருக்கு 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் காலத்துக்கு படிப்பு உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT