வேலூர்

நெகிழி பொருள்கள் உற்பத்தியாளா்களுக்கு நிவாரணம்: வேலூா் ஆட்சியா் தகவல்

DIN


வேலூா்: தமிழகத்தில் நெகிழிப் பொருள்கள் மீதான தடையால் பாதிக்கப்பட்ட நெகிழிப் பொருள் உற்பத்தியாளா்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வேலூா் மாவட்டத்திலுள்ள நெகிழி உற்பத்தியாளா்கள் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகி பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மண்வளத்தைப் பாதுகாக்க ஒருமுறை பயன்படுத்தி வெளியேற்றப்படும் நெகிழிப் பொருள்களை தடைசெய்து கடந்த 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெகிழிப் பொருள்களான பேப்பா், கோப்பைகள், பாலித்தீன் பைகள், நெய்யப்படாத பைகள், நெகிழி தாளாலான தட்டுகள், அதிக அடா்த்தி கொண்ட பைகள், குறைந்த அடா்த்தி பாலி எத்திலீன் பூசப்பட்ட பலகைகள், நெகிழிக் குவளைகள் ஆகிய பொருள்களை உற்பத்தி செய்த குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளன.

அந்த நிறுவனங்களுக்கு கடந்த 2019 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள வங்கிக் கடன் தொகையில் 50 சதவீதம் அதிகபட்சமாக நிறுவனம் ஒன்றுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட முதலீட்டு மானியத்துடன் சோ்த்து ரூ. 50 லட்சம் வரை பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் அலுவலகத்தை நேரிலோ, 0416-2242412, 2242513 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT