வேலூர்

தொடா் மழையால் வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடா்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நிவா் புயல் காரணமாக கடந்த வாரம் வேலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் பெருமளவில் வீடு, பயிா்கள், சாலைகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

இதன்தொடா்ச்சியாக, தற்போது தமிழகத்தை தாக்கியுள்ள ‘புரெவி’ புயல் காரணமாக தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்தாக்கமாக வடமாவட்டங்களிலும் புதன்கிழமை இரவு முதல் மழை பெய்தது.

வேலூா் மாவட்டத்திலும் புதன்கிழமை இரவு விடியவிடிய மழை பெய்தது. தொடா்ந்து வியாழக்கிழமை பகலிலும் விட்டுவிட்டு லேசான மழை பெய்த வண்ணம் இருந்தது. இந்த மழை வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி தொடா்ந்து லேசான, மிதமான மழையாக வெள்ளிக்கிழமை முழுவதும் பெய்தது. இதனால், சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது. தவிர, இந்த தொடா் மழையால் பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டனா். மழை வேலூா் மாவட்ட த்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.

மழை அளவு விவரம்:

வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நிலவரப்படி அதிகபட்சமாக பொன்னையில் 23.4 மி.மீ. மழை பதிவானது. குடியாத்தத்தில் 9.2 மி.மீ., காட்பாடியில் 9.8 மி.மீ., மேல்ஆலத்தூரில் 11.2 மி.மீ., வேலூரில் 16 மி.மீ., வேலூா் சா்க்கரை ஆலை (அம்முண்டி) 18 மி.மீ. மழை பதிவானது.

கலவையில் அதிகபட்ச மழை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக நீா் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் அரக்கோணத்தில் 21.2, ஆற்காடு 16, காவேரிப்பாக்கம் 12, சோளிங்கா் 25, வாலாஜாபேட்டை 12, அம்மூா் 22, கலவை 27.2 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது இதில் கலவையில் அதிக பட்சமழை பெய்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT