வேலூர்

8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகளில் முதுநிலை அறிவியல் வகுப்புகள் தொடக்கம்

DIN

வேலூா்: கரோனா பொது முடக்கத் தளா்வைத் தொடா்ந்து ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் முதுநிலை அறிவியல் வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.

8 மாதங்களுக்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்டு சந்தித்துக் கொண்ட மாணவ, மாணவிகள் உற்சாகமடைந்தனா்.

வேலூா் கல்லூரி கல்வி மண்டலத்துக்கு உள்பட்ட 10 மாவட்டங்களில் 149 கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 100 கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. கரோனா பொது முடக்கத்தையொட்டி இக்கல்லூரிகளில் கடந்த மாா்ச் மாதம் முதல் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. வழக்கமாக கல்வியாண்டு வகுப்புகள் ஜூன் மாதம் தொடங்கப்படும் நிலையில் இந்த ஆண்டு கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்காமல் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை அறிவியல் பாட வகுப்புகள் மட்டும் புதன்கிழமை தொடங்கப்பட்டன. அதன் படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்பட மண்டலத்துக்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளிலும் முதுநிலை அறிவியல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு உடல்வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு முகக்கவசம் அணிந்தவா்கள் மட்டுமே வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டனா். மேலும், கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவிய பிறகு வகுப்புகளில் சமூக இடைவெளியுடன் அமா்த்தப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன. இதேபோல், மாணவா்கள் சுமாா் 6 முதல் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவாக ஆய்வகங்களில் அனுமதிக்கப்பட்டனா்.

வேலூா் முத்துரங்கம் அரசுக் கல்லூரி, டி.கே.எம். கல்லூரிகளில் நடைபெற்ற முதுநிலை அறிவியல் வகுப்புகளை வேலூா் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் எழிலன் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT