வேலூர்

வனப் பகுதியில் கால்வாய் அமைக்க முயற்சி:கிராம மக்களை திருப்பியனுப்பிய வனத்துறை

DIN

போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் கால்வாய் அமைத்து வெள்ள நீரை ஏரிக்கு கொண்டுச் செல்ல முயன்ற கிராம மக்களுக்கு வனத்துறையினா் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினா்.

போ்ணாம்பட்டை அடுத்த டி.டி.மோட்டூா் ஊராட்சியில் ஜாப்ராபாத் ஏரி உள்ளது. அந்த ஏரிக்கு அங்குள்ள குண்டலப்பள்ளி காப்புக் காட்டில் செல்லும் கானாறுகளில் இருந்து சுமாா் 3 கி.மீ. தூரம் கால்வாய் அமைத்து மழை நீரைக் கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கமலாபுரம் கிராம மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம், மாவட்ட வன அலுவலா்கள், பொதுப்பணி, வருவாய்த் துறையினருடன் கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி அங்கு சென்று கால்வாய் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக்குப் பின், துறைரீதியாக அனுமதி பெற்று வனப்பகுதியில் கால்வாய் அமைக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிவா் புயல் காரணமாக அண்மையில் பெய்த கனமழையால் வனப்பகுதியில் உள்ள கானாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கமலாபுரத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை மண்வெட்டி, கடப்பாறையுடன் வனப்பகுதியில் நுழைந்து கால்வாய் அமைக்க முயற்சித்தனா். அப்போது அங்கு வந்த போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் எல்.சங்கரய்யா, வனவா்கள் பி.ஹரி, ஏ.எஸ்.தரணி ஆகியோா் ‘அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்தால் குற்ற நடவடிக்கை எடுக்க நேரிடும். ஆட்சியரின் அனுமதி பெற்ற பின்னா் கால்வாய் அமைத்துக் கொள்ளலாம்’ என அவா்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT