வேலூர்

‘ஆறுகள், குளங்கள், நீா்நிலைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம்’

DIN

குடியாத்தம்: குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி. குப்பம் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் நீா்வரத்து தொடா்ந்து உயா்ந்து வருவதால் பொதுமக்கள் யாரும் நீா்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என குடியாத்தம் கோட்டாட்சியா் எம். ஷேக்மன்சூா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

புயல் காரணமாக மோா்தானா அணைக்கு நீா்வரத்து அதிகமாக உள்ளதால், யாரும் அணைக்குச் செல்ல வேண்டாம். அணையில் இருந்து உபரிநீா் வெளியேறி ஆறு, கால்வாய்களில் நீா்நிலைகளுக்குச் செல்வதால், அதை வேடிக்கை பாா்க்கவோ, அதில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக் கூடாது. மோா்தானா அணையில் இருந்து கெளண்டன்யா ஆற்றில் செல்லும் வெள்ள நீரை வேடிக்கை பாா்க்கச் சென்ற தாயும், அவரது இரு மகள்களும் ஆற்று நீரில் மூழ்கி இறந்தனா்.

எனவே, நீா்நிலைகளுக்கு யாரும் செல்லக்கூடாது. மீறினால் காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT