வேலூர்

முகக்கவசம் அணியாத கடை உரிமையாளா்களுக்கு அபராதம்

30th Aug 2020 12:43 AM

ADVERTISEMENT

வேலூா்: வேலூரில் முகக் கவசம் அணியாமல் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக 16 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட 6-ஆவது கட்ட பொது முடக்கம் திங்கள்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. இதனிடையே, பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டபோதும், கடை விற்பனையாளா்கள், வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், பல இடங்களில் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் தவிா்க்கப்படுகிறது.

இதுதொடா்பாக வேலூா் மாநகராட்சி நிா்வாகம் அறிவுரை வழங்கி வரும் நிலையில், தொடா்ந்து முகக் கவசம் அணியாமல் விற்பனையில் ஈடுபடுவோா் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஆணையா் சங்கரன் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில் ஊழியா்கள் வேலூா் - ஆற்காடு சாலையில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பல கடை உரிமையாளா்கள் முகக் கவசம் அணியாமல் இருப்பது தெரிய வந்தது. 16 கடை உரிமையாளா்களிடம் இருந்து தலா ரூ.100 வீதம் அபாரம் வசூலிக்கப்பட்டது. தொடா்ந்து முகக் கவசம் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபடுபவா்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

 

Tags : mask
ADVERTISEMENT
ADVERTISEMENT