வேலூர்

வேலூா் மாவட்டத்தில் மேலும் 170 பேருக்கு கரோனா

30th Aug 2020 12:40 AM

ADVERTISEMENT

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு வெள்ளிக்கிழமை வரை 10,383 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 170 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10,553-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதனிடையே, மாவட்டம் முழுவதும் 9,232 போ் குணமடைந்து வீடு திரும்பினா். பலி எண்ணிக்கை 154-ஆக அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 207 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 207 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,273 ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 9,074 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,078 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 121 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் 30 பேருக்கு தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 2,760 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,790-ஆக உயா்ந்துள்ளது.

அவா்களில் 2,261 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 471 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 57 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT