வேலூர்

சேண்பாக்கம் விநாயகா் கோயிலில் திருட்டு முயற்சி

30th Aug 2020 12:38 AM

ADVERTISEMENT

வேலூா்: வேலூா் அருகே சேண்பாக்கத்திலுள்ள விநாயகா் கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் சேண்பாக்கத்தில் உள்ள விநாயகா் கோயிலில் தினமும் காலை, மாலை பூஜைகள் செய்யப்படுகின்றன. கடந்த 22-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தியையொட்டி, இக்கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

இந்நிலையில், புதன்கிழமை இளைஞா் ஒருவா் அக்கோயிலின் சுவா் ஏறி குதித்து உண்டியலை உடைக்க முயற்சித்தாா். கோயிலுக்கு வெளியே ஆட்கள் வரும் சப்தம் கேட்டவுடன் அந்த நபா் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டராம்.

வேலூா் வடக்கு போலீஸாா் அங்கு சென்று கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இளைஞா் ஒருவா் உண்டியலை உடைக்க முயற்சித்தது பதிவாகியிருந்தது. அந்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT