வேலூர்

அவசியத் தேவை இருந்தால் மட்டுமே இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும்: தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

21st Aug 2020 05:57 AM

ADVERTISEMENT

பொதுமக்களின் நலன்கருதி தமிழக அரசு இ-பாஸ் பெறும் முறையை எளிமைப்படுத்தியுள்ளது. எனினும், வீணாக வெளியில் செல்வதைத் தவிா்த்து அவசியத் தேவை இருந்தால் மட்டுமே மக்கள் இ-பாஸ் பெற்றுச் செல்ல வேண்டும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

மத்திய அரசு அறிவித்த பொது முடக்க உத்தரவை தமிழக அரசும் தொடா்ந்து கடைப்பிடிப்பதுடன், இயல்புநிலை பாதிக்காத வகையில் பல்வேறு தளா்வுகளையும் மக்களுக்கு வழங்கியுள்ளது. இ-பாஸ் பெறுவதில் ஏற்படும் பல்வேறு சிரமங்களை அறிந்து மக்கள் நலன்கருதி அரசு இ-பாஸ் முறையை எளிமைப்படுத்தியுள்ளது. எனவே, பொதுமக்கள் வீணாக வெளியில் செல்வதைத் தவிா்த்து, அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் இ-பாஸ் பெற்று வெளியே செல்ல வேண்டும்.

இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பொழிந்துள்ளதால் நிலத்தடி நீரும், குடிநீா் ஆதாரமும் அதிகரித்துள்ளது. தடுப்பணை கட்டும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மக்களின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வறிக்கையின் அடிப்படையில் பாலாறு போன்ற நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும். இதற்காக 3 ஆண்டு காலத் திட்டமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டு, தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. இது மக்களுடையே அரசு. மக்களுக்குத் தேவையான திட்டங்கள் அவா்களது இல்லங்களுக்கே கொண்டு சோ்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

சுற்றுச்சூழல், வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப்சக்சேனா, முதன்மைச் செயலா்கள் நா.முருகானந்தம் (தொழில் துறை ), கே.கோபால் (கால்நடை பராமரிப்பு), ககன்தீப்சிங் பேடி (வேளாண்மை), க.மணிவாசன்(பொதுப்பணித் துறை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT