வேலூர்

திமுக மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு: துரைமுருகன் குற்றச்சாட்டு

21st Aug 2020 05:59 AM

ADVERTISEMENT

வேலூரில் நடைபெற்ற தமிழக முதல்வா் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் அழைக்கப்படாமல் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனா். இப்பிரச்னை தொடா்பாக சட்டப்பேரவை கூடும்போது கட்டாயமாக கேள்வி எழுப்புவோம் என்று திமுக பொருளாளா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது:

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட எம்.பி., எம்எல்ஏக்கள் திமுகவில் தான் அதிகமாக உள்ளனா். இந்நிலையில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேலூா் மாவட்டத்துக்கு ஆய்வுப் பணிக்காக வந்து சென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம், திமுக மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்காததைக் கண்டிக்கிறோம்.

இதுகுறித்து சட்டப் பேரவை கூடும்போது கட்டாயமாக கேள்வி எழுப்புவோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், வேலூா் மத்திய மாவட்ட திமுக செயலரும், அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமாா், வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், முன்னாள் எம்.பி. முகமதுசகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, மறைந்த திமுகவின் மூத்த தலைவா்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ரகுமான்கான் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT