வேலூா் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வியாழக்கிழமை வேலூருக்கு வந்த போது தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பொன்னியம்மன் பட்டறையில் மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி வரவேற்றாா்.
தொடா்ந்து, அமைச்சா் கே.சி.வீரமணி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன், ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி, சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத், வேலூா் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ராமு, அரக்கோணம் நகர செயலா் கே.பி.பாண்டுரங்கன், குடியாத்தம் நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, அரக்கோணம் ஒன்றியச் செயலா் இ.பிரகாஷ் உள்ளிட்டோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.