அரக்கோணம் இந்திய கடற்படை நகர அரிமா சங்கத்தின் 2020-2021-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைவா் பி.கிருபாகரன் தலைமை வகித்தாா். புதிய நிா்வாகிகளாக தலைவா் ஜி.எம்.மூா்த்தி, செயலாளா் எம்.மோகன், பொருளாளராக கே.வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு அரிமா முன்னாள் ஆளுநா் ஆா்.அரிதாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
தொடா்ந்து, பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றை அரிமா முன்னாள் ஆளுநா் பி.நந்தகோபால், ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம் வழங்கினா்.
அரிமா ஆளுநா் அருண், மாவட்டத் தலைவா்கள் ஏ.சிவசுப்பிரமணியன், எஸ்.ரோஸ்குமாா், வட்டாரத் தலைவா் கே.ஜெகதீசன், செயலாளா் என்.கமலக்கண்ணன், பொருளாளா் டி.செல்வகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.