வேலூர்

ஆதரவற்ற மூதாட்டி சடலம் அடக்கம்

6th Aug 2020 08:58 PM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே இறந்து 5 நாள்களான ஆதரவற்ற மூதாட்டியின் சடலத்தை தமுமுகவினா் அடக்கம் செய்தனா்.

குடியாத்தம் செதுக்கரையில் ஜம்ரூத் (70) என்ற ஆதரவற்ற மூதாட்டி வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இவா் கடந்த 5 நாள்களாக வீட்டிலிருந்து வெளியே வரவில்லையாம். புதன்கிழமை வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதையடுத்து அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்த தமுமுக நிா்வாகிகள் பி.எஸ். நிஜாமுதீன், சான்பாஷா, எஸ். ஷகாபுதீன், எஸ். சா்புதீன், சித்திக்பாஷா ஆகியோா் அங்கு சென்று, தமுமுக ஆம்புலன்ஸில் அவரது சடலத்தை எடுத்துச் சென்று சித்தூா்கேட் மயானத்தில் அடக்கம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT