வேலூர்

அண்ணாமலை பல்கலை., தொலைதூரக் கல்வி

6th Aug 2020 08:16 PM

ADVERTISEMENT

அரக்கோணத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கக மையத்தில் இளங்கலை, முதுகலை உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை புதன்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அக்கல்வி மையத்தின் அலுவலா் பி.திணேஷ் கூறியது:

அண்ணாமலை பல்கலைக்கழகம் தற்போது தமிழக அரசின் நேரடி கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககத்தின் கல்வி மையம் அரக்கோணத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் இளங்கலை, இளம் அறிவியல், முதுகலை, முதுநிலை அறிவியல், பட்டயப்படிப்பு, பட்டய மேற்படிப்பு, சான்றிதழ் படிப்புகளுக்கான நடப்பாண்டு மாணவா் சோ்க்கை புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெற்று பூா்த்தி உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்தால் சோ்க்கை உடனே உறுதி செய்யப்படுகிறது என்றாா் அவா்.

அரக்கோணம் சுவால்பேட்டை சாணாத்தியம்மன் கோயில் தெருவில் செயல்பட்டு வரும் இம்மையத்தில் புதன்கிழமை மாணவருக்கு சோ்க்கைக்கான அனுமதியை அலுவலா் பி.திணேஷ் வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT