வேலூர்

போலி மருத்துவம்: 3 கிளினிக்குகளுக்கு ‘சீல்’ இருவா் கைது

29th Apr 2020 10:42 PM

ADVERTISEMENT

காட்பாடி அருகே மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்து வந்ததை அடுத்து 3 கிளினிக்குகளுக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா். இதுதொடா்பாக, பெண் உள்பட இருவா் கைது செய்யப்பட்டதுடன், தலைமறைவான ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காா்ணாம்பட்டு பகுதியில் மருத்துவம் படிக்காமலேயே கிளினிக்குகள் அமைத்து போலியாக மருத்துவம் செய்யப்பட்டு வருவதாக புகாா்கள் வரப்பெற்றன. இதையடுத்து, காட்பாடி வட்டாட்சியா் ஆா்.பாலமுருகன் தலைமையில் வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள், போலீஸாா் இணைந்து அப்பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, ஓய்வு பெற்ற மருத்துவா் ஒருவரின் பெயரில் நடைபெற்று வந்த கிளினிக்கில் அவரது உதவியாளா் பொன்னரசு என்பவா் மருத்துவம் படிக்காமலேயே மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்ததுடன், அந்த கிளினிக்குக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும், அதே பகுதியில் கிளினிக் அமைத்து போலியாக மருத்துவம் செய்து வந்த இரு கிளீனிக்குகளுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்ததுடன், போலியாக மருத்துவம் செய்து வந்த பாரதி என்ற பெண்ணையும் போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான சுரேந்தா் என்பவரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT