வேலூர்

விளை பொருள்களை எடுத்துச் செல்லும்போது தடை ஏற்பட்டால் உதவி

26th Apr 2020 06:54 AM

ADVERTISEMENT

விளை பொருள்களை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது தடை ஏற்பட்டால் உதவிகளைப் பெற மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் விவசாய விளை பொருள்களை பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லவும், அங்கிருந்து விளை பொருள்களைக் கொண்டு வரவும் எந்த தடையும் இல்லை. இதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு காவல் துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனா். வேலூா் மாவட்டத்துக்கு என மாவட்ட கரோனா கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அதிகாரியாக மாவட்டக் குற்ற ஆவணக் காப்பக துணைக் காவல் கண்காணிப்பாளா் பொற்செழியன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

விவசாயிகள், சிறு வியாபாரிகள் தங்களது விளை பொருள்களை எடுத்துச் செல்லும்போது மாவட்டத்தில் தடை ஏற்பட்டால் இந்தக் கட்டுப்பாட்டு அறையை 94981 81358, 94981 47746 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT