வேலூர்

விதிமீறல்: துணிக்கடை, ஹோட்டலுக்கு சீல்

26th Apr 2020 06:44 AM

ADVERTISEMENT

வேலூரில் ஊரடங்கு விதிமுறையை மீறிய துணிக்கடை, ஹோட்டலுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சனிக்கிழமை சீல் வைத்தனா்.

வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸாா் சனிக்கிழமை காலை வேலூா் மூங்கில் மண்டி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு ஊரடங்கு விதிமுறையை மீறி திறக்கப்பட்டிருந்த துணிக் கடையைப் பூட்டி சீல் வைத்தனா். மேலும் அதேபகுதியில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிக் கொண்டிருந்ததாக ஹோட்டல் ஒன்றையும் பூட்டி சீல் வைத்தனா்.

இவ்வாறு ஊரடங்கு விதிமுறையை மீறுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT