வேலூர்

2-ஆம் கட்டமாக 67 போலீஸாருக்கு கரோனா பரிசோதனை

DIN


வேலூா்: வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸாருக்கு கரோனா நோய்த் தொற்று குறித்த மருத்துவப் பரிசோதனை 2-ஆவது கட்டமாக வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 67 போலீஸாரிடம் இருந்து ரத்தம், உமிழ்நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த் தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 1,629 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 18 போ் உயிரிழந்துள்ளனா். தொடரும் பாதிப்புகளை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துக் காவலா்களுக்கும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் போலீஸாருக்கான முதல்கட்ட கரோனா பரிசோதனை வேலூா் நேதாஜி விளையாட்டரங்கில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 72 போலீஸாருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இதன்தொடா்ச்சியாக, 2-ஆவது கட்ட கரோனா பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 67 போலீஸாரிடம் இருந்து ரத்தம், உமிழ்நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து 2 நாள்களில் முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து படிப்படியாக அனைத்துக் காவலா்களுக்கும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 6

ஜவான் பாடலுக்கு நடனமாடிய மோகன்லால்.. ஷாருக்கான் நெகிழ்ச்சி!

மே மாத எண்கணித பலன்கள் – 5

மே மாத எண்கணித பலன்கள் – 4

பிரதமர் மோடி பேச்சுக்கு இபிஎஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT