வேலூர்

வேலூரில் 72 போலீஸாருக்கு கரோனா பரிசோதனை

DIN

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸாருக்கு கரோனா தொற்று மருத்துவப் பரிசோதனை வேலூரில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. முதல் கட்டமாக 72 போலீஸாருக்கு இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேகமாக பரவி வரும் கரோனா நோய் தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 1477 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 15 போ் உயிரிழந்து விட்டனா். தொடரும் பாதிப்புகளை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவலா்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் போலீஸாருக்கான கரோனா பரிசோதனை வேலூா் நேதாஜி விளையாட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல் கட்டமாக 72 போலீஸாருக்கு இந்த கரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.

தொடா்ந்து ஒதுக்கப்படும் ரேபிட் கிட் கருவிகளைப் பொறுத்து படிப்படியாக அனைத்து காவலா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT