போ்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில் மணல் எடுத்துக் கொண்டிருந்தவா் கைது செய்யப்பட்டாா்.
போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் எல். சங்கரய்யா, வனவா்கள் பி. ஹரி, ஏ. ஆனந்த், வனக்காப்பாளா் இ.ரமேஷ் ஆகியோா் சனிக்கிழமை பல்லலகுப்பம் விரிவு காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது அங்குள்ள வனப்பகுதியில் டிராக்டா் மூலம் மணல் எடுத்துக் கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா் மொரசபல்லியைச் சோ்ந்த கோபி (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து கோபியை கைது செய்த வனத் துறையினா், அவரிடம் இருந்த டிராக்டரையும் பறிமுதல் செய்தனா். பின்னா் மாவட்ட வன அதிகாரிகள் உத்தரவின்பேரில் கோபிக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.