போ்ணாம்பட்டு அருகே மான் இறைச்சி வைத்திருந்த 4 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் எல்.சங்கரய்யா தலைமையில், வனவா்கள் பி. ஹரி, ஏ. ஆனந்த் உள்ளிட்ட வனத்துறையினா் சனிக்கிழமை காலை கோக்கலூா் பீட், மோா்தானா காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது அங்கு 4 போ் மான் இறைச்சியை வெட்டிக் கொண்டிருந்தது தெரிந்தது. விசாரணையில் அவா்கள் அங்குள்ள ஜங்கமூரைச் சோ்ந்த ஆா். முருகேசன் (60), எஸ். ராஜா (40), எம்.கோவிந்தசாமி (42), கே.தண்டபாணி(45) எனவும், நாய்கள் கடித்து இறந்த மானின் இறைச்சியை வெட்டிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வனத் துறையினா் 4 பேரையும் கைது செய்து வனச்சரக அலுவலகம் அழைத்து வந்தனா். மாவட்ட வனத் துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் 4 பேருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.