ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியின் அதிமுக செயலராக ராமசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் சு.ரவி எம்எல்ஏ பரிந்துரையின் பேரில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர். அவர் ஏற்கனவே திமிரி ஒன்றியச் செயலராகவும், ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி இணைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது, திமிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார். இவருக்கு அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.