பேர்ணாம்பட்டு அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
பேர்ணாம்பட்டை அடுத்த சேரங்கல், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்(40). இவர், தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை புதிதாக வாங்கியுள்ள பைக்கில் பேர்ணாம்பட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் கவிழ்ந்ததில் ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.