வேலூர்

முதலுதவி பயிற்சி முகாம்

22nd Sep 2019 01:09 AM

ADVERTISEMENT


திருப்பத்தூரில் குழந்தை இல்ல பணியாளர்களுக்கு திறன் வளர்ப்பு மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.
திருப்பத்தூர் எஸ்ஆர்டிபிஎஸ் தொண்டு நிறுவன வளாகத்தில் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட குழந்தைகள் நல குழுவும் இணைந்து முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் தலைவர் ஏ.ஜி.சிவ கலைவாணன் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தை நிலைக்குழுவின் பாதுகாப்பு அலுவலர் எம்.நிஷாந்தினி வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக எஸ்ஆர்டிபிஎஸ் அமைப்பின் இயக்குனர் என்.தமிழரசி வரவேற்றார்.
இளம் செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் கல்வி மாவட்ட அமைப்பாளரும், முதலுதவி பயிற்சி முகாம் அமைப்பாளருமான எஸ்.என்.ஜனார்தனன் முதலுதவிப் பயிற்சிகளை செயல் விளக்கம் மூலமாகவும், ஒலி, ஒளி காட்சிகள் மூலமாகவும் பயிற்சியளித்தனர். நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத பாதிப்புகளின்போது எலும்பு முறிவு, மயக்க நிலை, விஷப்பூச்சிகள் கடிப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதனை தீர்க்கும் முறைகள் செயற்கை சுவாசம் அளிக்கக் கூடிய முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
திருப்பத்தூர் மண்டல அளவில் நடைப்பெற்ற இப்பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை இல்ல பணியாளர்கள்  பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT