தமிழ்நாடு சுற்றுச் சூழல்துறை, வேலூர் பசுமை அறக்கட்டளை, தேசிய பசுமைப் படை இணைந்து நடத்திய சர்வதேச ஓசோன் விழிப்புணர்வு தின விழா கருத்தரங்கம், ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் (பொறுப்பு) பு.அப்சர்பாஷா தலைமை வகித்தார். தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மார்க்க சகாயம் , இளைஞர் செஞ்சிலுவை சங்க மாநில கருத்தாளர் கா.வே.கிருபானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தார். பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மு.இறைவன் வரவேற்றார். ஆற்காடு வட்டாட்சியர் வத்சலா ஒசோன் தினம் குறித்து பேசினார். தொடர்ந்து பள்ளியின் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் தூய்மை பாரத இயக்க பரப்புரையாளர் சசிகலா, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.