வேலூர்

வேலூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

10th Sep 2019 08:52 AM

ADVERTISEMENT

வேலூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான ஆர்.காந்தி தலைமை வகித்து பேசியது: 
செப்டம்பர் 15-இல் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள திமுகவின் முப்பெரும் விழாவில்  திமுக  இளைஞரணியினர் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். அதே போல, வேலூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை விரைந்து  முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார். முன்னதாக, மாநில இளைஞரணி துணைச்செயலர் வழக்குரைஞர் எஸ்.ஜோயல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுக இளைஞரணி முன்னெடுத்துவரும் பணிகள் குறித்து பேசினார்.
இதில் மாவட்ட அவைத்தலைவர் அ.அசோகன், மாவட்டத் துணைச் செயலர்கள் ஏ.கே.சுந்தர முர்த்தி, என்.ராஜ்குமார், மாவட்டப் பொருளாளர் மு.கண்ணையன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர,பேரூர்,செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT