வேலூர்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

10th Sep 2019 08:54 AM

ADVERTISEMENT

காட்பாடி அருகே விருதம்பட்டில் கடந்த சில நாள்களாக சரிவர குடிநீர் வினியோகிக்கப்படாமல் இருந்து வந்தது. அத்துடன், அங்குள்ள தெருக்களில் கழிவுநீர்க் கால்வாய்களும் சேதமடைந்துள்ளன. இப்பிரச்னைக்குத் தீர்வு காணக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் திங்கள்கிழமை காலை காட்பாடி - வேலூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீஸார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர், கழிவுநீர் கால்வாய் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT