வேலூர்

ரூ.1.98 கோடியில் சாலை விரிவாக்கம்: ஆட்சியர் ஆய்வு

7th Sep 2019 05:51 AM

ADVERTISEMENT

வேலூர் பாகாயத்தில் ரூ. 1.98 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். 
நெடுஞ்சாலைகள் துறை சார்பில் வேலூர் பாகாயம் மத்திய சிறை வட்டச் சாலையில் ரூ. 1.98 கோடி மதிப்பில் இரு வழித்தடத்தை மூன்று வழித்தடமாகவும், சிறுபாலத்தை அகலப்படுத்தவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  இத்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு சாலையின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர், பணிகள் நடைபெற்று வரும் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நெடுஞ்சாலைகள் துறை கோட்டப் பொறியாளர் ச.ச.சரவணன், உதவிக் கோட்டப் பொறியாளர் க.அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT