வேலூர்

ராணுவ வீரரிடம் ரூ. 6.44 லட்சம் மோசடி

7th Sep 2019 05:55 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி வட்டம் சொரக்கல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவிமுருகன். இவரது மகன் செல்வக்குமார் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சஞ்சீவிமுருகன், வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்தார்.
அதில், எனது மகன் செல்வக்குமாரின் செல்லிடப்பேசிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்த அழைப்பில் பேசியவர், ஐசிசி கிரிக்கெட் கிளப்பில் இருந்து பேசுவதாகவும், தங்களுக்கு ரூ. 4.85 கோடி பரிசு கிடைத்திருப்பதாகவும், அத்தொகையைப் பெற முதலில் தாங்கள் ரூ. 7 லட்சம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக, செல்வக்குமார் என்னைத் தொடர்பு கொண்டு கூறியதுடன், ஒரு வங்கிக் கணக்கை கொடுத்து அதில் பணம் செலுத்தும்படி தெரிவித்தார். அதன்படி, திருப்பத்தூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 6.44 லட்சத்தைச் செலுத்தினேன். அதன்பிறகு, பரிசுத் தொகை ஏதும் வரவில்லை. பரிசுத் தொகை கிடைத்திருப்பதாகக் கூறி ரூ. 6.44 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர்.
மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT