வேலூர்

ரயில்மோதி ஒருவர் பலி

7th Sep 2019 11:44 PM

ADVERTISEMENT

ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதியதில் உயிரிழந்தார். 
ஜோலார்பேட்டை அருகே பக்கிர்தர்கா ரயில்வே கேட் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே அந்த நபர் உயிரிழந்தார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT