வேலூர்

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

7th Sep 2019 05:52 AM

ADVERTISEMENT

மேல்பட்டி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
வளத்தூர்-மேல்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT