வேலூர்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு 

7th Sep 2019 11:42 PM

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவ மழையையொட்டி, வேலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையையொட்டி வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய  முதல்கட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். 
இதில், பருவமழையின்போது இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யவும்,  பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துத் துறை அலுவலர்களும்  மேற்கொள்ள வேண்டும். அத்துடன், பொதுமக்களுக்கு பருவமழையின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள்  குறித்தும், தொற்று நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள இனங்களுக்கு வரைபடம் தயார் செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வட்டாட்சியர்கள் தங்கள் வட்டத்துக்கு உள்பட்ட பலதுறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான மண்டல குழு அதிகாரிகள், முதல் நிலை பொறுப்பாளர்களைக் கொண்டு கட்செவி அஞ்சல் குழுவைத் தொடங்கி தினசரி நிலையைக் கண்காணிக்க  வேண்டும். ஜேசிபி, டிராக்டர், பொக்லைன் ஆகியவற்றின் உரிமையாளர்கள் விவரங்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மீட்பு மையங்களின் தற்போதைய நிலை குறித்து சார்}ஆட்சியர்கள், வருவாய்க் கோட்டாட்சியர்கள் தணிக்கை செய்து தயார்படுத்த வேண்டும். 
இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வசதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பிலும் இயற்கை இடர்பாடுகளைத் தெரிவிக்க பசநஙஅதப அடட எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை குறித்தும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தாட்சாயிணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT