வேலூர்

முதுநிலை விரிவுரையாளருக்கு நல்லாசிரியர் விருது

7th Sep 2019 02:49 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டையில், வேலூர் மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராக ப. மணி பணியாற்றி வருகிறார். இவரை தமிழக அரசு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்காக தேர்வு செய்துள்ளது. இதையடுத்து சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்  மாநில பள்ளிக் கல்வி,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இந்த விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தார். 
மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT