வேலூர்

தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்

7th Sep 2019 02:51 AM

ADVERTISEMENT

திருப்பத்தூரை அடுத்த கந்திலி வட்டாரத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைப்பெற்றது.
கந்திலி வட்டாரத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் கடந்த 19-ஆம் தேதி முதல் தீவிர தொற்று நோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி, புதன்கிழமை கணக்கெடுப்புப் பணியை துணை இயக்குநர், மருத்துவ பணிகள்(தொழுநோய்) மருத்துவர் பிரீத்தா மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் தீபா ஆகியோர் ஆய்வு செய்ததில் 3 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
புதிய நோயாளிகளுக்கு இலவச காலணிகளும் வழங்கப்பட்டது. அதனையடுத்து, விஷமங்கலம், பேராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று தொழுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், அப்பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தொழு நோய் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில்,மேற்பார்வையாளர் புருஷோத்தமன் உடனிருந்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT