வேலூர்

தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது

7th Sep 2019 05:57 AM

ADVERTISEMENT

கிரிசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு நல்லாரிசியர் விருது வழங்கப்பட்டது.
தமிழகக் கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆலங்காயம் ஒன்றியம் கிரிசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் துரைக்கு 2018-19-ஆம் ஆண்டுக்கான தமிழக கல்வித் துறையின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது.  இந்த விருதை சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் துரை பெற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் துரைக்கு ஆசிரியர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT