வேலூர்

சாலைப் பணியாளர்கள் சங்க  மாவட்ட செயற்குழுக் கூட்டம்

7th Sep 2019 05:52 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஆற்காட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் எம்.சரவணன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் டி.விநாயகம், ஜே.கே.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் லோ. சிவசங்கரன் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலர் கா. பெருமாள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
இதில், சாலைப் பணியாளர்களுக்கு கருவூலம்மூலம் ஊதியம் வழங்க ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, சேலத்தில் வரும் டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநில மாநாட்டில் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT