வேலூர்

காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 11:45 PM

ADVERTISEMENT

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம்பூர் நகர காங்கிரஸார் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சரவணன் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்தில்  நிர்வாகிகள் சா. சங்கர், சோலூர் மாணிக்கம் மற்றும் மின்னூர் சங்கரன், விஜயன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.  அவர்களை ஆம்பூர் நகர காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT